மக்கள் பாற்சோறு சமைத்து கொண்டாட்டம்!

0
498

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளனர்.  

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்காலை நகர மையத்திலிருந்து கார்ல்டன் ஹவுஸ் நோக்கி பேரணியாகச் சென்று வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் இராஜினாமா செய்தி பரவியதையடுத்து போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளனர்.  

Gallery
Gallery
Gallery
Gallery