பெண்ணைத் தாக்கி தப்பிச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

0
528

கிரிபத்கொடை பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவர் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கொடை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று இரவு 45 வயதுடைய பெண் ஒருவர், நபரொருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

இச்சம்பவம் அருகில் உள்ள சிசிரீவி கெமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நபர், மேற்படி பெண்ணை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு அருகில் இருந்த கட்டடமொன்றின் மீது ஏறிய போது, ​​உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, அவர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.