பிரதமரின் பதவி விலகல் கோரிக்கை பொய்யானது!

0
773

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது, மேலும் அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் தொடர்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த தீர்மானித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.