நாட்டை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுங்கள்!

0
391

நாட்டை அழிக்காமல் உடனடியாக பதவி விலகுமாறு அரசாங்க தலைவர்களிடம் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார, (Yehali Sangakkara) கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய நெருக்கடிக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.