சபாநாயக்கரிற்கு ‘மொட்டு’ கட்சியினரின் ஆதரவு உண்டு! வெளிவந்த ரகசியம்!

0
723

நாடாளுமன்றத்தில் சபாநாயக்கரிற்கு ‘மொட்டு’ கட்சியினரின் ஆதரவு உள்ளது என்பது இன்று உலகத்திற்கு வெளிக்கொணரப்பட்டது.

இதன் மூலம் இரகசியமான முறையில் அக் கட்சியும் அரசாங்கத்திற்கு சார்பாக காணப்படுகிறது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சுயாதீன அமைச்சர் குழுவில் எதிர்க்கட்சி தலைவரிற்கு நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

குறித்த கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரிற்கு பதிலாக ரஞ்சித் மத்தும பண்டார சமகி ஜன பலவேகய கட்சியின் பிரதான செயலாளர் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் மூலம் மக்களின் பொருளாதார பிரச்சனைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் இன்னும் பொருட்கள் இன்றி விலை உயர்வால் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இந்த தருணத்தில் அரசாங்கத்தை வீழ்த்தி, புதிய அரசாங்கத்தை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் கடைசியில் பேசப்படுவது இவ் கடன் பிரச்சனை மட்டுமே.

இன்று நாங்கள் அக் கடிதத்தில் கூறியது,

இவ் அரசாங்கத்தை வீழ்த்தி பாரம் எடுங்கள், நாங்கள் எதிர்க்கட்சியினராக செயற்படுகிறோம் அல்லது எங்களுடன் இணைந்து இவ் அரசாங்கத்தை முன்னெடுங்கள் என்று.

மேலும், நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினால் மட்டுமே மக்களின் அன்றாட செலவு குறையாது எனவே அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதற்கு முடிவுகள் தீர்வுகள் உங்களிடம் இருப்பின் தெரிவியுங்கள்.