120 விமான சேவைகளை ரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

0
29

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை இன்று ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளுர் குறுகிய தூர விமான விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய தூர விமான விமானங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இவ்வாறு ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான சேவை ரத்தானது முன்கூட்டியே திட்டமிடபட்டது என்றும், இந்த ரத்து நடவடிக்கை குறித்து தங்களது பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் குறிப்பிட்ட விமானச் சேவையை முன்னறே அட்டவணையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கொரொனா காலத்தில் எற்பட்ட நெருக்கடி மற்றும் அதனால் தற்போது எற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறை ஆகிய நெருக்கடியை சமாளிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது Oneworld partner Finnair-ல் இருந்து விமானம் மற்றும் பணியாளர்களை கொண்டு வந்து கோடை காலத்திற்கான விமான சேவை அட்டவணையை நிலைப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்று , பிரித்தானியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான easyJet தனது தினசரி விமான சேவைக்கான 70 விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.