ட்விட்டர் குறித்து சூசகமாக தெரிவித்த எலான் மஸ்க்

0
310

சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தில் சூறாவளி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என சூசகமாக தெரிவித்து வந்தார்.

அத்துடன், புதிய அம்சங்களை ட்விட்டரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சாதாரண பயனர்கள் எப்போதும் போல் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால், வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து ட்விட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய அளவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.