பூமி 2.0 கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!

0
894

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. பூமியை போல சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் மனிதர்கள் வாழும் தன்மை கொண்டதா என்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது.

இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த டைட்டனில் ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையும் இந்த டைட்டனில் இருக்கிறது.

பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பருவ நிலைகளால் இயக்கப்படும் உலகளாவிய மணல் சுழற்சியின் காரணமாக உருவான இந்த டைட்டனின் மேற்பரப்பில் உள்ள ஏரிகள் பூமியில் இருப்பதைவிட வெவ்வேறு பொருட்களால் நிரம்பியுள்ளன.

திரவ மீத்தேன் நீரோடை டைட்டனின் பனிக்கட்டி மேற்பரப்பில் படிந்துள்ளன. நைட்ரஜன் காற்று ஹைட்ரோகார்பன் மணல் திட்டுகளை உருவாக்குகிறது. டைட்டனின் தனித்துவமான குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதளமான நிலப்பரப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக புவியியலாளர் மேத்யூ வபோட்ரே(Matthew Wabotre) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது வெளிப்படுத்தியுள்ளது.

புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் பருவகால சுழற்சி டைட்டனின் மேற்பரப்பில் துகள்களின் இயக்கத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதை காட்டுகிறது. மேலும் பருவ கால நீரோட்ட சுழற்சியுடன் பூமியின் அம்சங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நீண்டகாலமாக இந்த மர்மமான உலகத்தை பற்றி பேசி வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி குறித்து புவியியலாளர் மேத்யூ லபோட்ரே(Matthew Wabotre) கூறியதாவது பூமியில் உள்ள குன்றுகள் சிலிக்கேட் பாறைகள் மற்றும் தாதுக்களால் உருவாகின்றன.

அவை காலப்போக்கில் வண்டல் துகள்களால் அரிக்கப்பட்டு, காற்று மற்றும் நீரோடைகள் வழியாக நகர்ந்து வண்டல் அடுக்குகளில் படிந்து இறுதியில் அழுத்தம், நிலத்தடிநீர் மற்றும் சில நேரங்களில் வெப்பத்தின் உதவியுடன் மீண்டும் பாறைகளாக மாறும். டைட்டனில் இதே போன்ற செயல் முறைகள் தான் குன்றுகள், சமவெளிகள் மற்றும் சமதள நிலப்பரப்பை உருவாக்கியது.

ஆனால் பூமி, செவ்வாய், வீனஸ் போல இல்லாமல் டைட்டனில் படிவுகள் திடமானகரிம சேர்மங்களால் ஆனது என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படை கரிம கூறுகள் எவ்வாறு துகள்களாக மாற முடியும் என்பதை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறார்கள்.

காற்றுகள் துகள்களை கொண்டு செல்லும் போது துகள்கள் ஒன்றோடொன்று மேற்பரப்புடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் காலப் போக்கில் துகள்களின் அளவை குறைக்கின்றன. காலப்போக்கில் மணல் துகள்கள் நிலையான அளவில் பராமரிக்கப்படுகின்றன.

கரீபியனில் பகாமாசை சுற்றியுள்ள ஆழமற்ற வெப்ப மண்டல கடல் பகுதியில் பெரும்பாலும் காணப்படும் சிறிய, கோள துகள்களான ஒயிட்ஸ் எனப்படும் பூமியில் உள்ள வண்டல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் விஞ்ஞானிகள் குழு படிவுகளுக்கான பதிவை கண்டறிந்தது.

கால்சியம் கார்பனேட் நீர்நிலைகளில் இருந்து இழுக்கப்பட்டு குவார்ட்ஸ் போன்ற துகள்களை சுற்றி அடுக்கு களில் சேரும்போது இந்த படிவுகள் உருவாகின்றன. இதன் மூலம் டைட்டனில் உள்ள மணல் திட்டுகளின் முரண்பாட்டை ஆராய்ச்சியாளர்களால் தீர்க்க முடிந்தது. துகள்களை ஒரே துண்டாக இணைத்து சமநிலையை ஏற்படுத்துவதே இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.

மேலும் டைட்டனின் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந்துள்ளது. டைட்டன் எனப்படும் மாற்று உலகத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் வித்தியாசமானவையாக உள்ளன. ஆனால் அவை பூமியின் தன்மையுடன் காணப்படுகிறது என்பது கவரும் அம்சமாக உள்ளது.