கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு யுனெஸ்கோ அஞ்சலி

0
39

கொரோனா தொற்று காரணமாக தெற்காசியாவில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு யுனெஸ்கோ அஞ்சலி செலுத்தியுள்ளது. உலக ஊடக சுதந்திர தினம் இன்று (மே 03) அனுஷ்டிக்கப்படும் நிலையில் தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு யுனெஸ்கோ நிறுவனம் செலுத்தியுள்ளது.

தெற்காசியாவில் கொவிட்டினால் உயிரிழந்த ஊடகவியலார்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இல்லை. எனினும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் பல ஊடகவியலாளர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில், கொவிட்-19 நோயினால் குறைந்தபட்சம் 300 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் (ஐகுது) மதிப்பிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மாத்திரம் குறைந்தபட்சம் 284 ஊடகவியப் பணியாளர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டான், இந்தியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ பிரதிநிதி எரிக் பால்ட் இது தொடர்பாக கூறுகையில், “பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கொண்டு செல்லும் ஊடகவியலாளர்கள் முன்களத்தில் இருப்பர். அவர்களின் உளநிலை, உடல் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.