கோட்டாபயவின் வாக்குறுதியினால் பதவி பறிபோகும் நிலையில் மகிந்த!

0
53

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கும் மேலும் நால்வருக்கும் பிரதமர் பதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினேஸ் குணவர்தன தனக்கு நெருக்கமான பலரிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு பிரதமர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.