நாட்டைவிட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

0
60

 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் விசேடமாக கடல்வழியாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது சுலபமான வழி என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு படகுகளில் செல்லக்கூடிய பிரதேசங்களில் கடற் படையினரின் ரோந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இலங்கை விமானப் படையினரும் இந்நாட்களில் இதுகுறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வடக்கிலுள்ள சுமார் 200 பேர் கடல்வழியாக இந்தியா சென்றுள்ள நிலையில் பலர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.