மட்டக்களப்பில் பல்கலை மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

0
64

மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

மேலும், விரிவுரையாளரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக அதிபர் மற்றும் ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் வைத்து பூட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.