இலங்கையின் கையிருப்புக்கள் தொடர்பான தகவல்!

0
400

இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைந்த மட்டத்தை அடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்த இலங்கை தீர்மானித்துள்ள போதிலும் இன்றைய வெளிநாட்டு கையிருப்பு மூன்று நாட்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.  

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ளது. எனினும் அந்த கடன் நிதி உடனடியாக கிடைக்காது. முதல் கடன் தொகை கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக,  இந்தியா மற்றும் சீனாவிடம் கடன் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.72 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மூன்று நாட்களுக்குரிய இறக்குமதிக்கு செலுத்த மாத்திரமே அந்த பணம் போதுமானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.