அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய புதிய படிப்பு

0
625

அமெரிக்காவில் உள்ள பிரபல கல்லூரியில் ஆபாச படங்களை ஆராயும் புதிய ஆய்வு படிப்பு அறிமுகமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியால், ஆபாசப் படங்கள் உலகம் முழுவதும் பெரும் பணச் சந்தையாக மாறியுள்ளது. பல ஆபாச இணையதளங்களில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கொட்டுகின்றன.

பல நாடுகளில் ஆபாச படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பலர் இணையத்தில் பல்வேறு வசதிகள் மூலம் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள். உலகில் ஆபாசப் படங்களை அதிகம் தயாரிப்பது அமெரிக்காதான். இதனால்தான் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி வளர்ந்து வரும் ஆபாச வணிகத்தை ஆய்வு செய்ய புதிய ஆய்வு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் ஆபாச படங்கள் பார்ப்பது, பார்வையாளர்களை கவருவதில் என்ன மாதிரியான காரணிகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும்.