திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படு காயம்

0
25

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (22) பிற்பகல் திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முச்சக்கர வண்டி வந்த பாதையில் இருந்து வலப்புறப்பக்கமாக திரும்புவதற்காக திருப்பப்பட்ட போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சிசிடிவி காணொளி மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.