சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு ஆதரவளிக்கும் ரணில் விக்கிரமசிங்க!

0
342

றம்புக்கனை சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எனினும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் அதற்கு செல்லவில்லை என்று அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனவே சஜித் பிரேமதாச, தொன் பொய்களை கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் தாமே அதற்கு செல்லவில்லை

எனவே தம்மீதே தவறு இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தநிலையில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கைகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதியிடம் கையளித்தமையே பிரதமரின் தவறாகும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை அரசாங்கம் பொருளாதார திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேதாசவின் கோரிக்கைக்கு தாமும் ஆதரவளிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.