முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்த அமெரிக்க தூதுவர்

0
45

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து, இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான அவரது நோக்கு தொடர்பாக கலந்துரையாடியதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை பெண் தலைவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்புக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.