11 ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் மக்களின் எழுச்சி! விடை கிடைக்குமா?

0
41

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு “கோட்டாகோகம” என பெயர்சூட்டி இன்றுடன் 11 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.

நேற்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பிற்கு மத்தியிலும் இந்த ஆர்ப்பாட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது நேற்றுமுன்தினம் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக அரச தலைவர் செயலக கட்டத்தொகுதியில் வெவ்வேறு காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது.

இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருவதோடு போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.