புதிய அமைச்சரவை நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அமையாது! தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

0
444

தலைவலிக்குத் தீர்வாகத் தலையணையை மாற்றியது போன்றதே இந்த அமைச்சரவை மாற்றம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்சக்களுக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பு காணப்படுவதாகவும், இதனால் உலக அளவில் நாட்டுக்கு உதவிகள் கிடைக்கப்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவை தொடர்பில் தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் பிரதமர் தனது பதவியிலிருந்து ஒதுங்கி இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இளைஞர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமது போராட்டம் காரணமாக இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்ப்பது இதனை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் தனது கௌரவத்தைத் தக்க வைத்துக் கொண்டு பதவியை விட்டு விலகி, புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க வேண்டுமெனவும் அதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.