வியட்நாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்!

0
445

வியட்நாமில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2073.5 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் வியட்நாமின் மோக் சாவ் தீவு சுற்றுலாப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுனான் ப்ரோவின்ஸ் மாகாணத்தில் உள்ள 1410.7 அடி நீளமான Zhangjiajie Grand Canyon எனும் கண்ணாடி பாலமே, உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது.

இந்த நிலையில் தான் வியட்நாமில் உள்ள பாக் லாங் பாலம் ஏப்ரல் 30 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் 500 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறு ஒருங்கிணைப்பு தின விடுமுறைக்காக திறக்கப்பட உள்ள பாக் லாங் பாலம், உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற அங்கீகாரத்திற்காக கின்னஸ் உலக சாதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.