ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரிய மனித உரிமைகள் ஆணைக்குழு

0
346

ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் பொலிஸார் . இதேவேளை, ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் ரம்புக்கனைசம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.