புதிய பேருந்து கட்டண பட்டியல் வெளியானது

0
515

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம் சாதாரண சேவை பஸ்ஸின் குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாகவும், அதிகபட்ச கட்டணம் 2022 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், புதிய கட்டண திருத்தத்தின் கீழ், அரை சொகுசு பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 33 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 2,528 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் சொகுசு பஸ்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 3370 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.