“புடினுடன் பேச எனக்கு விருப்பமில்லை” பிரான்ஸ் அதிபர்!

0
30

உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” காரணமாக புடினுடனான(Vladimir Putin) உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்தார்.

“புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பிறகு நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறினார்.

உக்ரேனிய தலைநகர் கிவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், போர் தொடங்கிய காலத்தில் இருந்து உக்ரைன் அதிபரிடம் 40 முறை பேசியுள்ளதாக அவர் கூறினார்.

“நான் மீண்டும் கிவுக்குச் செல்வேன், ஆனால் என்னுடன் பயனுள்ள ஒன்றைக் கொண்டு வர அங்கு செல்வேன். “நான் கீவ் சென்றால், அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.