திடீரென சர்க்கரை அளவு அதிகரித்தால் என்ன நடக்கும்? நீரிழிவு நோயாளர்களே

0
594

சர்க்கரை அளவானது இரத்தத்தில் அதிகரித்தால் நீரிழிவு நோய் உண்டாகும். திடீரென சில நேரங்களில் சர்க்கரை அளவு வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரிக்கும் பிரச்னைகளும் அவ்வபோது நிகழும்.

அப்படி அதிகரித்தால் சில நேரங்களில் கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்கச் செய்யலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம். எனவேதான் மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சர்க்கரை அளவை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் எடுத்து குறித்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

அப்படி அளவு சற்று கூடுதலாக இருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இரத்ததில் இன்சுலின் அளவு குறைந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். சர்க்கரை அளவு ஒரு டெசிலிட்டருக்கு 140 மில்லிகிராம் குறைவாக இருக்க வேண்டும்.

ஒருவேளை 140 மில்லிகிராமிற்கு சற்று அதிகமாக இருந்தால் உணவு உண்டபின் மீண்டும் 2 மணி நேரம் கழித்து எடுக்க 180 மில்லிகிராமைக் கடந்து சென்றால் அது வரம்பை மீறி சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.

அப்படி இருக்கும்போது உங்களுக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். பார்வை மங்களாக தெரியும். தலைவலி, உடல் சோர்வு, அதிக பசி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை கண்டதும் உடனே அதைக் குறைப்பதற்கான வழிகளை தேட வேண்டும். அதற்கு முதலில் உங்கள் மருத்துவரை அணுகி உரிய மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.

இதற்கு முன் இன்சுலின் மருந்து எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் அடுத்த முறை நீங்களாகவே எடுக்கக் கூடாது. அப்போதும் மருத்துவரிடம் குளுக்கோஸ் அளவை கூறிய பின் அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

இன்சுலின் எடுத்தபின் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் குளுகோஸ் அளவை சோதனை செய்து பாருங்கள்.