முக்கிய பிரமுகரின் மகனை கடத்திய ரஷ்யா! அதிர்ச்சியில் உக்ரைன்

0
464

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவர் ஓலெக் புரியக்கின்( Oleg Buryak ) மகன் விளாடிஸ்லாவ்-வை ( Vladislav ) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக அதிர்ச்சித்  தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய படைகள் அந்த நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அவற்றின் முக்கிய நகரங்களின் மேயர்கள் மற்றும் மாநில நிர்வாக தலைவர்களை கடத்திவந்தது.

இந்தநிலையில், உக்ரைன் தென்கிழக்கு ஜபோரிஜ்ஜியா பகுதியின் மாநில நிர்வாக தலைவர் ஓலெக் புரியக்கின்( Oleg Buryak) மகன் விளாடிஸ்லாவ்-வை(Vladislav) (16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஓலெக் புரியக்கின்(Oleg Buryak) வெளியிட்டுள்ள தகவலில், “எனது மகன் கடத்தப்பட்டு விட்டான், ரஷ்யர்கள் அவனை கடத்திவிட்டனர், அவனுக்கு வெறும் 16 வயது தான் ஆகிறது, தற்போது அவன் எங்கு இருக்கிறான் என்று கூட தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் “இது தொடர்பாக தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் அனைத்து மனிதர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு எனக்கு உதவுங்கள், மற்றும் உலகம் அனைத்திற்கும் தெரியட்டும் ரஷ்யர்கள் உக்ரைனில் உள்ள குழந்தைகளையும் கடத்துகிறார்கள் என்று என தெரிவித்துள்ளார்.