இன்டர்போல் ரெட் வாரண்ட் கடத்தல் மன்னன் முத்ததால் சிக்கினான்!

0
30

மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ (Brian Donaciano Olguin Berdugo,) காதலிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தால் மாட்டிக்கொண்டார். 

கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ  (Brian Donaciano Olguin Berdugo,) சுமார் 200 நாடுகளுக்கும் மேல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இவர் உள்ளார்.

196 நாடுகளில் அவரைக் கைது செய்ய இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறபிக்கப்பட்டு உள்ளதனால் பெர்டுகோ தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் பெர்டுகோவின் (Brian Donaciano Olguin Berdugo,) கொலம்பிய காதலி அவர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்ததால் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ கைது செய்யப்பட்டார்.

கலியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் மலை உச்சியில் உள்ள கிறிஸ்டோ ரேயில் பெர்டுகோ (Brian Donaciano Olguin Berdugo,) காதலியுடன் உல்லாசமாக பொழுதை களித்தபோது அவர் காதலியை முத்தமிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை காதலி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கொலம்பிய அதிகாரிகளை எச்சரித்தது, இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பெர்டுகோ (Brian Donaciano Olguin Berdugo,) இப்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Gallery