மிலானிற்கான துணைத் தூதுவராக பந்து சமரசிங்க நியமிக்க படுவாரா?

0
43

மிலானிற்கான துணைத் தூதுவராக பிரபல சிங்கள நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

திட்டவட்டமாக இதனைத் தெரிவித்துக் கொள்வதாக, வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிலானிற்கான துணைத் தூதுவராக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.