இருமடங்காக அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை! வரலாறு காணாத புது வருடம்!

0
43

நாளைய தினம் தமிழ் சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில் திண்பண்டங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.  

பயற்றம் பலகாரம், கொண்டை பலகாரம், அதிரசம் போன்ற 70 ரூபா தொடக்கம் 80 வரை விற்பனை செய்யப்படுகின்றன. 

ஒரு கொக்கிஸ் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.  

இதேவேளை, ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 

தேங்காய் எண்ணெய், சீனி, அரிசி மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பும் பற்றாக்குறையும்  காணப்படுவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.