ராஜபக்சவினருக்கு ஆதரவளித்தமை குறித்து மனம் வருந்தும் பிரபல இசையமைப்பாளர்

0
604

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவு வழங்கிய பிரபல சிங்கள இசையமைப்பாளர் கலாநிதி ரோஹன வீரசிங்க, தனது முகநூல் பக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ரோஹன வீரசிங்க தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எமது அன்புக்குரிய நந்தா அக்கா, சுனில் அண்ணா ஆகியோர் கோட்ட கோ கிராமம் போராட்ட களத்திற்கு சென்றதும் எனது அமைதி தொடர்பான பலர் என்னிடம் கேட்கின்றனர். உண்மையில் முழு மனதுடன் போராட்டத்தை வாழ்த்துகிறேன், ஆசிர்வதிக்கின்றேன்.

பலர் என்னை நோக்கில் கைகளை காட்டுகின்றனர். ஒரு காலத்தில் ராஜபக்சவினருக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் மிகப் பெரிய மனவருத்தம் உள்ளது.

எனது வாழ்க்கையில் அழிக்க முடியாத கரும்புள்ளி ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எவருக்கும் தவறு ஏற்படுவது இயற்கை.2019 ஆம் ஆண்டு  69 லட்சம் வாக்குகளை வழங்கியவர்களின் நானும் ஒருவன்.

தற்போது முழு இலங்கை அரசியல் குறித்தும் அனைவரும் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். 69 லட்சம் வாக்காளர்கள் போல் நானும் கனவு எதிர்பார்ப்புகளுக்கு சிக்கினேன் என்பது உண்மை.

எனினும் தற்போது யதார்த்தம் தெளிவாகியுள்ளது. கொள்ளை, ஊழல், மோசடி குடும்ப அரசியல், அநீதி, வினைதிறன் இன்மை, வெட்கமின்மை இந்த ஆட்சியின் மூலம் தெளிவாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு செவிசாய்காமை மிக மோசமான செயல், அமைதியாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் நாடி துடிப்பை நானும் உணர்கின்றேன். போராட்டம் வெற்றியடையட்டும்” என ரோஹன வீரசிங்க தெரிவித்துள்ளார்.