இலங்கையின் 13 வங்கிகளை எதிர்மறை கண்காணிப்பு தரத்துக்கு( RWN )உட்படுத்தியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!

0
755

இலங்கையின் 13 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ், எதிர்மறை கண்காணிப்பு தரத்துக்கு உட்படுத்தியுள்ளது.

இதன்படி,

-மக்கள் வங்கி – கொமர்ஷல் பேங்க் ஒப் சிலோன் பிஎல்சி

-ஹட்டன் நேஷனல் வங்கி பிஎல்சி

-சம்பத் வங்கி பிஎல்சி -தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி

-DFCC வங்கி பிஎல்சி

-செலான் வங்கி பிஎல்சி

-நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎல்சி

– பேன் ஏசியா கோப்பரேசன் பிஎல்சி

-யூனியன் பேங்க் ஒப் கொழும்பு பிஎல்சி

-அமானா வங்கி பிஎல்சி

-சனச அபிவிருத்தி வங்கி பிஎல்சி

-இலங்கையின் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (HDFC) ஆகிய வங்கிகள் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் பாதக தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

RWN என்ற பாதகமான கண்காணிப்பு தரப்படுத்தலானது, வெளிநாட்டு நாணய நிதியுதவிக்கான தடையற்ற நிலை மற்றும் வங்கிகள் எதிர்கொள்ளும் அழுத்தத்தின் விளைவாக உருவாகும் அபாயத்தை பிரதிபலிப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது.