பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய அழுத்தம்! உச்சத்தை தொடும் வீடுகளின் விலை

0
342

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது கடந்த 2004 பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச விலைஉயர்வாகும் எனவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் சராசரி வீடுகளின் விலையானது 265,312 பவுண்ட்கள் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 33,000 பவுண்ட்கள் அதிகரித்துள்ளது.

இந்த விலைஉயர்வானது பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தின் அனைத்து பகுதிகளையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இந்த ஆண்டு மட்டும் 15 சதவிகிதம் இந்த விலை உயர்வானது ஏற்பட்டுள்ளது.

Charming houses in beautiful, cobbled Mermaid Street, Rye, England

கொரோனா காலத்தில் 22 சதவிகித பொதுமக்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அவர்களில் பெரும்பாலானோர் பெரிய சொத்துக்களின் மீது கவனத்தை குவித்துள்ளனர்.

இதனால் தனிவீடுகளின் மதிப்பு 68,000 பவுண்ட்கள் வரை அதிகரித்து உள்ளது, மற்றும் சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 14 சதவிகிதம் அல்லது 24,000 பவுண்ட்கள் அதிகரித்து இருந்தன.

கொரோனா பெரும் தொற்றினால் ஏற்பட்ட ஆழ்ந்த பொருளாதார பாதிப்பால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாகவும், ஆனால் பிரித்தானிய அரசாங்கத்தின் ஊதிய ஆதரவு திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் சேமிப்பு போன்ற காரணங்களால் வீட்டு சந்தை ஆதரிக்கப்பட்டு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விலை உயர்வானது பிரித்தானியாவில் புதிய பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நேஷன்வைட்டின்(Nationwide) தெரிவித்துள்ளது.