கடுமையாக அரசாங்கத்தை விமர்ச்சிக்கும் சுற்றுலா பயணிகள் !

0
308

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.

இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரித்துள்ளது. பெருமளவு டொலர்களும் வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகிய காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலாவுக்கு சென்றவர்கள் எரிபொருள் இன்றி நடு வீதியில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாகன வசதிகள் இன்றி லொறிகளிலும் மாட்டு வட்டிகளிலும் தமது இருப்பிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த சுற்றுலா பயணிகள் தமது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வருவது பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், அந்நிய செலாவணியும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தடைப்பட்டுள்ளன.