களுத்துறையில்14,000 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு கண்டுபிடிப்பு!

0
335

களுத்துறை பாலிந்தநுவர, அத்வெல்தொட்ட ராசிகல பகுதியில் உள்ள புராதன பாறைக் குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 14,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதக் குடியேற்றம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் அகழ்வுப் பணிகளை மாணவ துறவிகளுடன் இணைந்து இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. பஹியங்கல சுமங்கல தேரர் நடாத்தி வருகிறார்.

இவ் ஆராய்ச்சியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் பயன்படுத்திய பல கல் கருவிகள் மற்றும் அவர்களால் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேராவின் வழிகாட்டலின் கீழ் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.