Beast
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் Beast.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பீஸ்ட் படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியிருந்த அரபிக் குத்து பாடல் வேற லெவல் ஹிட்.
அதனை தொடர்ந்து தற்போது ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் பாடல்களை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போது வரையில் பீஸ்ட் படத்தின் புதிதாக எந்தஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் அனைவரும் செம கடுப்பில் உள்ளனர்.
பின்வாங்கிய பீஸ்ட் !
இதற்கிடையே ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதியை இன்னும் அறிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
மேலும் தற்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி பரவி வருகிறது, அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறதாம். KGF 2 திரைப்படம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்துடன் பீஸ்ட் மோதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.