அதிர்ச்சி தகவல்! சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா… பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிப்பு…

0
409

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பயங்கரமாக பரவத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது Omicron வைரஸின் இரண்டாவது மாறுபாடான stealth Omicron என்னும் வைரஸ், நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 1,337 பேருக்கு இந்த வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல பொலிசாரின் அனுமதியைப் பெற்றாகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஷாங்காயில் வாழும் Yimeng Li என்பவர் கூறும்போது, தான் தினமும் வேலைக்குச் செல்லும்போது, எப்போது பொதுமுடக்கம் அறிவிப்பார்கள், அலுவலகம் திடீரென மூடப்படும் என்ற கவலையுடனேயே வேலைக்குச் செல்வதாகவும், திடீரென வீட்டுக்குச் செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று கருதி, ஒரு மெத்தை மற்றும் சில உணவுப் பொருட்களை தயாராக அலுவலகத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஹொங்ஹொங்கைப் பொருத்தவரை, திங்கட்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 26,908 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 249 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.  

ஆனாலும், இப்போதைக்கு அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படப்போவதில்லை என நகர தலைவரான Carrie Lam தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹொங்ஹொங்கில் இதுவரை 700,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளானதுடன், சுமார் 4,200 பேர் பலியாகியுள்ளார்கள். அதில், பெரும்பாலானோர் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், சீனக்குடியரசில் வாழும் மக்கள் இணையம் வாயிலாக ஹொங்ஹொங் மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஹொங்ஹொங் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், அதனால்தான் தொற்று மீண்டும் பரவத் துவங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

Beijingஐப் பொருத்தவரை, அங்கு பல கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வாழும் மக்கள், தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகளுக்கு இணங்கவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பெருந்தொற்று மொத்தமாக ஒழியட்டும், அப்புறம் கட்டுப்பாடுகளை நெகிழ்த்திக்கொள்ளலாம் என்கிறார் Tong Xin (38) என்பவர்.