ஐக்கிய அமீரகத்தில் வணிக வளாகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 1.48 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அல் ஐன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறித்த வணிக வளாகம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தால் படுகாய
ம
டைந்த சிறுவன் பல்வேறு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே, இந்த விபத்துக்கு காரணம் என விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மட்டுமின்றி, வணிக வளாக
பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இந்த விவகாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிறுவனின் மண்டை ஓடு 30 சதவீதம் சேதமடைந்ததுடன், முகம் சிதைந்ததாகவும், பேசும் திறன் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
கைகள் 50 சதவீதம் வரை காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு, சிறுவனின் தந்தை 10 மில்லியன் திர்ஹாம் இழப்பீடாக கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த அல் ஐன் சிவில் நீதிமன்றம் தற்போது 1.48 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.