இலங்கையில் வருகிறதுஅதிரடிச் சட்டம்!மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

0
564

தனி பாவனை மற்றும் குறுங்கால பாவனைக்கான யை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீராவிற்கு உள்ள அதிகாரங்களின்படி இந்த ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இரண்டு விசேட வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பக்கெட், காற்றடைக்கப்படக்கூடிய விளையாட்டு பொருட்கள், பிளாஸ்திக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியன குறித்த திகதிகளில் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய துறையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை சேமிக்கப் பயன்படுத்தப்படும் PET மற்றும் PVC பிளாஸ்டிக்குகளும் தடைசெய்யப்படும்.

சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்புகளின் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.