உருமாறிய கொரோனா: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22.14 லட்சத்தை கடந்தது

0
424

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் உயிர்ப்பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.

இந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,214,208 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 102,586,386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 74,284,138 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 109,440 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் தற்போது 2வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.