தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது – சுகாதாரத்துறை செயலாளர்

0
365

சென்னை அடையாறில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு கடமைகளை தாண்டிமனிதநேய அடிப்படையில் உதவியதற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், “தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது. சுகாதாரத்துறை அமைச்சர், நான், மூத்த டாக்டர்கள், அரசு மருத்துவமனை ‘டீன்கள்’ என அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளோம். எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தொற்று எண்ணிக்கை குறைந்ததால் தடுப்பூசி வேண்டாம் என்று நினைப்பது தவறு. நர்சுகளுக்கான 1,500 பணியிடங்கள் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் கலந்தாய்வு செய்யப்படும்”. என்றும் கூறினார்.