நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும்.
நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய்.
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். அட உண்மை தாங்க கோவைக்காய் நாம் தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும்.
மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
உடல் எடை
உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
பல் பிரச்சனைகளுக்கு
பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் குறைக்கிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
இதய நோய்கள்
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.