இனி பிரித்தானிய கடல் கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது – சீனா!

0
426

இனி பிரித்தானிய கடல்கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது என்று கூறி பிரித்தானியா மீதான தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது ஒரு நாடு. அந்த நாடு… சீனா!

இப்படி பிரித்தானியா மீது கோபத்தில் சீனா கொந்தளிக்கக் காரணம்? சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு (British National (Overseas) passport holders) பிரித்தானிய குடியுரிமை தர வழிவகை செய்யும் திட்டம் ஒன்றை பிரித்தானியா அறிவித்துள்ளது.

அதன்படி, சுமார் 300,000 பேர் ஹொங்ஹொங்கை விட்டு பிரித்தானிய வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, முதலில் பிரித்தானியா தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியது.

இப்போது, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பிரித்தானிய வெளிநாட்டு பாஸ்போர்ட்களை பயண ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி தன் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியுள்ளது சீனா.