கொழும்பு மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

0
510

 

இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரும் சுதந்திர தின நிகழ்விற்காக ஒத்திகை நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை,

கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெறவுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி பொரளை முதல் தாமரை தடாகம் நோக்கி பயணிக்கும் வாகனங்களும், தாமரை தடாக திசையில் இருந்து பொரளை நோக்கி பயணிக்கும் வாகனங்களும்,

குறித்த காலப்பகுதியில் பொரளையில் இருந்து ஹொட்டன் பிரதேசம், விஜயரமா மாவத்தை ஊடாக வோட்பிரதேச திசைக்கு பயணித்து நகர மண்டபம் மற்றும் யுனியன் பிரதேச திசை நோக்கி பயணிக்க முடியும்.

பொரளை திசை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இந்த வீதிகள் ஊடாக பயணிக்க முடிவதுடன் குறித்த பகுதிகளில் ஏனைய மாற்று வீதிகள் தொடர்பில்,

சமிக்ஞை பதாதை மூலம் காவல்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தும் செயற்பாடும் இடம்பெறும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த போக்குவரத்து திட்டத்தால் காலி வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கும் பௌத்தாலோக்க மாவத்தை ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கும் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.