அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

0
471

 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இங்கிலாந்திற்கு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசாங்கத்தின் கவலைகள் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இருந்து புதிய முன்பதிவுகள் ஏற்றுக்கொள்வதை கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளுக்கும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், விதிவிலக்குகளில் GCC நாட்டவர்கள் மற்றும் பிற GCC நாடுகளுக்குத் திரும்பும் குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள் உள்ளனர் என்றும் கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

முன்னர் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுக்கொள்வது COVID-19 நெறிமுறைகள் மற்றும் அவர்களின் இறுதி இலக்கு நாட்டிற்குள் நுழைய அரசாங்கத்தின் அனுமதியைப் பொறுத்தது என்றும் கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.