இலங்கை பாணந்துறை மனித கொலை விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துருளியை மீட்க நடவடிக்கை..!

0
327

பாணந்துறை – பள்ளிமுல்ல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பயன்படுத்திய உந்துருளியை பாணந்துறை – ஊராகட்டுவ தொட்டுபொல பகுதியில் பொல்கொட கங்கையின் கிளை ஆற்றில் சந்தேகநபர்கள் கைவிட்டு சென்றுள்ளனர்.

இதன்படி இன்றைய தினம் குறித்த உந்துருளியை சுழியோடிகளை பயன்படுத்தி மீட்கவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோண் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸை பகுதிக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட காவல்துறையினரால் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சந்தேகநபர்களால் படகு ஒன்றின் உதவியுடன் குறித்த உந்துருளி ஆற்றில் கைவிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி ஒன்று பாணந்துறை – வந்துரம்முல்ல பகுதியில் வைத்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் 16 தோட்டாக்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதோடு சம்பவத்தில் 32 வயதான ஒருவர் மரணித்தார்.

போதை வர்த்தகம் தொடர்பான நிதி முரண்பாடு காரணமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.