அதிகரிக்கும் துயரம்… பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திய பிரபலமான நாடுகள்

0
497

கொரோனா துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஸ்பெயின், போர்த்துகல் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா துயரங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் அபாய நிலை ஏற்பட்டு

ள்ளது.

இந்த நிலையில், பாரிஸ், மாட்ரிட்

மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதை இடைநிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையே பிரதான காரணம் என கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும்போக்கான நிலைப்பாடே என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தும் நிலை

ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரான்சில், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு அடுத்த நான்கு வாரங்கள் வரை புதிதாக தடுப்பூசி பெற முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தாமதமானது, ஏற்கனவே முதல் டோஸ் எடுத்துக்கொண்ட மக்களுக்கு, தங்களின் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போர்த்துகள் நாட்டை பொறுத்தமட்டில், இரண்டு மாதங்கள் வரை தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில், 10 நாட்களுக்கு தடுப்பூசி விநியோகம் இருக்காது என அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரித்தானியாவின் புதிய நோவாவாக்ஸ் தடுப்பூசி அனுமதி கிடைத்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிய வந்துள்ளது.

முதற்கட்டமாக 60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் தயாரிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.