மாதம்பே மணல் அகழ்வு தொடர்பான ஆய்வு நிறைவு

0
412

 மாதம்பே – சுதுவெல்ல பகுதியில் மணல் அகழ்வு தொடர்பாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் மேற்கொண்ட ஆய்வறிக்கை எதிர்வரும் புதன்கிழமை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பொறியியலாளர்களை கொண்ட குழு, மாதம்பே பகுதிக்கு சென்று ஆய்வுகளை நடத்தியதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திர விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த அனுமதிப்பத்திரங்கள், உரிய நியமங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாக அநுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், குறித்த நிலைமைக்கான காரணம் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல கூறியுள்ளார்.

மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதம்பே மக்கள், இன்று (28) 6 ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.