கோவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற எண்ணிக்கை திடீரென அதிகரித்த காரணத்தினால் கம்பஹா மாவட்ட வைத்தியசாலை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நேற்று மாத்திரம் 200ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பலரை வீடுகளுக்கு அனுப்பி அங்கேயே சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 18ஆம் திகதியிலிருந்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.