வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து

0
359

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை ஜின்னா தெருவை சேர்ந்தவர் கபீர். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி பசீலா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் வசிந்து வந்த நிலையில் இன்று காலையில் வீட்டின் சமையலறையிலிருந்து புகை வந்தது.

அங்கு சென்று பார்த்த போது வீட்டின் சமையலறையில் தீ எரிவதை கண்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அப்பகுதியினர் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை அகற்றினர். இதனால் பெரும்விபத்து தவிர்க்கபட்டது. பின்னர் பற்றி எரிந்த தீயினை அணைத்தனர்.

குடியிருப்பு பகுதியில் வீட்டில் தீபிடித்ததால் அப்பகுதியில் கடும்புகை மூட்டம் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்ததில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.