டெல்லி பாதுகாப்பு நிலவரம் – அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை

0
481

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் நடந்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளை தனது இல்லத்துக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த மோதல் குறித்தும், வன்செயல்கள் குறித்தும் அமித்ஷாவிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். இதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏற்கனவே 4 ஆயிரத்து 500 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றமான இடங்களில் கூடுதலாக 2 ஆயிரம் துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், விரைவு அதிரடிப்படையினரும் பணியில் உள்ளனர்.