ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி போட வேண்டாம்

0
439

‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து, இதுவரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டுக் கொண்டுஉள்ளனர்; இவர்களில், 500க்கும் அதிகமானவர்களுக்கு அலர்ஜி பாதிப்பு உள்ளது.

தடுப்பு மருந்தில், ‘எல் ஹிஸ்டிடைன், எல் ஹிஸ்டிடைன் ஹைட்ரோ குளோரைடு மோனோஹைட்ரேட், பாலிசார்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டை சோடியம் எடிடேட் ஹைட்ரேட்’ போன்ற வேதிப் பொருட்களுடன், தண்ணீர் சேர்க்கப்பட்டு உள்ளது.

காய்ச்சல், ரத்தக் கசிவு பிரச்னை, ரத்த உறைவை தடுக்கும் மாத்திரை, எதிர்ப்புச் சக்தியை குறைக்கும், ‘இமினோ சப்ரசென்ட்’ மாத்திரை சாப்பிடுபவர்கள், எந்தெந்த பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தும் போன்ற அனைத்து விபரங்களையும், தடுப்பூசி போடுவதற்கு முன், உங்கள் டாக்டர் அல்லது தடுப்பு மருந்து தரும் மருத்துவ ஊழியரிடம் மறைக்காமல் சொல்லி விட வேண்டும்.

கர்ப்பிணி, தாய்ப்பால் தருபவர்கள், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் உள்ளவர்களும், அது பற்றி தெளிவாக டாக்டரிடம் ஆலோசித்த பின், தடுப்பூசி போட வேண்டும். சமீபத்தில், வேறு ஏதேனும் தடுப்பூசி போட்டு இருந்தாலும், அது குறித்தும் தெரிவித்து விடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.‘

‘கோவாக்சின்’ தயாரிக்கும், ‘ஐதராபாத் பாரத் பயோடெக்’ நிறுவனம், தங்கள் இணையதளத்தில், ஒவ்வாமை இருப்பவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம். கர்ப்பிணிகள், தாய்ப்பால் தருபவர்கள், காய்ச்சல் உட்பட, வேறு உடல் கோளாறுகள் இருந்தாலும், தடுப்பூசி போட வேண்டாம். தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என விவரமாக பதிவிட்டுள்ளது.